ஆசியவியல் நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள இந்நூலில் பழமையான, காணக்கிடைக்காத பதினெட்டு சிற்றிலக்கியங்கள் அறிமுகத்துடன் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கிறித்தவ இலக்கியத்தில் ஆய்வு செய்பவர்களுக்கு மூலநூலாக பயன்படும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
திட்டூர் தேசிகரால் இயற்றப்பட்ட கிறித்தவ பஜனைக் கீதங்கள் என்னும் இந்நூல் முதன்முதலாக தற்போது வெளியிடப்படுகின்றது. இந்நூலில் 148 கீர்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.
சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் வாழ்வும் வளமரபும் என்னும் இம்மொழிபெயர்ப்பு நூல் சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் வரலாற்றையும் மரபுகளையும் தமிழில் தருகின்றது.